மட் /மமே /பன்சேனை பாரி வித்தியாலயத்தில் நடைபெறும் 2 நாள் சாரணர் பயிற்சி பாசறை நிகழ்வு...

 மட் /மமே /பன்சேனை பாரி வித்தியாலயத்தில் நடைபெறும் 2 நாள் சாரணர் பயிற்சி பாசறை நிகழ்வு...

(கனடா) அன்புநெறி அமைப்பின் அனுசரணையுடன் யாழ் மாவட்ட பாடசாலைகளின். 60 மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் மட் /மமே /பன்சேனை பாரி வித்தியாலயத்தில் நடைபெறும் 2 நாள் சாரணர் பயிற்சி பாசறை நிகழ்வு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளரும், அன்புநெறி பன்சேனை அபிவிருத்தி அமைப்பின் தலைவருமாகிய திரு.ரகுவரன் கலந்து சிறப்பித்ததோடு, அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பார்களான S.மகேந்திரகுமார் அவர்களும் Y. ஜெயச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மாலை, இரவு நேர நிகழ்வின் விருந்தினர்களாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் S. முருகேசப்பிள்ளை அவர்களும், அதிபர்களான V. சுந்தரநாதன் மற்றும் சுந்தரமோகன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அதுமட்டுமன்றி பெற்றோர்களும், பழைய மாணவர்களும் இரண்டு நாட்களும் சிறப்பாக கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு பன்சேனை பாரி வித்தியாலயத்தின்  வரலாற்றில் பொன்னான நாள் எனவும் இவ் இரண்டு நாட்களும் மிகவும் பெறுமதியான நாட்களாகடந்து சென்றதாகவும் இதனை ஒழுங்கு செய்து தந்த அன்புன்றி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிருவாக உறுப்பினர்களுக்கும் பாடசாலை நிருவாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அதிபர் தெரிவித்தார்.















Comments