மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 166 வது சாரணிய ஸ்தாபகர் தின நிகழ்வு.............
100 வருடங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சாரணிய வரலாற்றில் 166 வது சாரணிய ஸ்தாபகர் தினத்தை நடை பவணியுடன் சிறப்பித்தனர்.
நடைபவணியானது பாடசாலையில் இருந்து புறப்பட்டு மட்டக்களப்பு நகரின் ஆமென் கோனார் வீதி வழியாக சென்று, பிரதான வீதியை அடைந்தது. அங்கிருந்து மத்திய வீதி வழியாக மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு சென்று, அதிலிருந்து மாவட்ட நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் உள்ள நீரூற்றுப் பூங்காவினை சென்றடைந்தது.
பின்னர் சாரணத்தின் தந்தை பேர்டன் பவுல் அவர்களின் சிலைக்கு பாடசாலை அதிபர் ஆர்.பாஸ்கர் அவர்களால் சாரணர் கழுத்து பட்டி அணிவிக்கப்பட்டது.
மீண்டும் நடைபவணி அங்கிருந்து மட்டக்களப்பு, சப்பல் வீதி வழியாக பாடசாலையை வந்தடைந்து சாரண மாணவர்களின் ஒன்று கூடல் இடம் பெற்றது.
Comments
Post a Comment