மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய தேசிய பாடசாலையில் 166வது சாரண ஸ்தாபகர் நிகழ்வு......

 மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய தேசிய பாடசாலையில் 166வது சாரண ஸ்தாபகர் நிகழ்வு......

 மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய தேசிய பாடசாலையில் 166வது சாரண ஸ்தாபகர் நிகழ்வானது அதிபர் K.சொர்ணேஸ்ஸரன் அவர்களது வழிநடத்தலில் சாரண தலைவர்கள் திரு.ருத்ராகரன் மற்றும் திருமதி.S.தமிழ்செல்வன் ஆகியோரது தலைமையில் பாடசாலையின் முன்னால் உள்ள ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவருமான V.வாசுதேவன் கலந்து கொண்டு உரையாற்றுகையில் நாட்டிற்கான நற்பிரஜைகளை உருவாக்குவதில் சாரணியம் முன்னிலை வகிப்பதாக கூறிச் சென்றார்.
தொடர்ந்து, சிவானந்தா பழைய சாரணர் சங்க ஆலோசகர் V.கமலதாஸ் அவர்கள் உரையாற்றுகையில் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களிடையே பரவிக்காணும் பயங்கர போதையிலிருந்து நீங்கள் மாத்திரமல்லாது உங்களது நண்பர்களையும் பாதுகாக்க வேண்டியது பற்றி வலியுறுத்திச் சென்றார்.
இன்றைய நாளை பயன்தரு மரக்கன்றுகளை சாரணர்களுக்கு வழங்கி நிகழ்வினை நிறைவுறுத்தினர்.
நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட சாரணர்களுடன் பழைய சாரணர்களும் பங்குபற்றியமை விஷேட அம்சமாகும்.









Comments