மதுபான கடைகளுக்கு நாளைய தினம் (04) பூட்டு, மதுவரித் திணைக்களம் அறிவிப்பு......
சுதந்திர தினத்தையிட்டு நாளை (04) சகல மதுபான நிலையங்களையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் நாளை சனிக்கிழமை கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, அன்றைய தினம் நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment