இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க- பெப்ரவரி 01 முதல் அமுலாகும் வகையில் நியமனம்.....

 இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க- பெப்ரவரி 01 முதல் அமுலாகும் வகையில் நியமனம்.....

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க, இலங்கை மகளிர் கிரிக்கெட்டின், வழிகாட்டல் மற்றும் மேம்பாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2023, பெப்ரவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகஇ இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் மிகவும் பிரபலமான தடகள விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஜயசிங்க, தனது நாட்டிற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே பெண் வீராங்கனை என்பதோடு, ஓட்டப் போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே ஆசிய பெண் தடகள வீராங்கனையுமாவார்.

அவர் தனது துணிச்சல் மற்றும் உறுதிப்பாடு தொடர்பான அனுபவங்கள் மூலம் இலங்கையிலுள்ள தற்போதைய மற்றும் வருங்கால பெண் கிரிக்கெட் வீரர்களின் சந்ததியினருக்கு ஊக்கமளிப்பார் என எதிர்பார்ப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இந்த புதிய சவாலை ஏற்பதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இது இளம் பெண் விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் ஈடுபடவும், சவால்களை சமாளிக்கவும், எதிர்காலத்தில் அவர்கள் தகுதியான 'நட்சத்திரங்களாக' மாற்றவும் தனக்கு ஒரு வாய்ப்பை அளிக்ப்படுவதாக, சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Comments