வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (Velmurugan Distributors) T/10 League போட்டிக்கான அட்டவணை வெளியீடு........

 வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (Velmurugan Distributors)  T/10 League போட்டிக்கான அட்டவணை வெளியீடு........



மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக புற்தரை மைதானத்தில் நடைபெறவுள்ள வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (Velmurugan Distributors) T/10  League போட்டிக்கான அட்டவணை (28)ம் திகதியாகிய இன்று வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (Velmurugan Distributors) அலுவலகத்தில்  வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (Velmurugan Distributors)பிரதிநிதிகளான சண்முகம் காசிப்பிள்ளை, காசிப்பிள்ளை சதீஸன் மற்றும் காசிப்பிள்ளை வித்தியா ஆகியோரால் போட்டியில் பங்குபற்றும் கழகங்களுக்கிடையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் முதல் தடவையாக கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தில் மட்டக்களப்பில் பிரபலமான 08 அணிகளை இனைத்து மட்டக்களப்பு வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (Velmurugan Distributors) T/10  League போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். இதுவரை எந்த ஒரு விளையாட்டு கழகமோ, அமைப்போ அல்லது ஸ்தாபனமோ இது போன்றதொரு புற்தரை மைதானத்தில் ஒரு கடின பந்து கிரிக்கெட் போட்டியை மட்டக்களப்பில் நடாத்தியதாக வரலாறே இல்லை என்றே கூறலாம். இதற்கு பிள்ளையார் சுழி இடுவது போல் மட்டக்களப்பில் சிறந்த சேவையாற்றி வழங்கி வரும் வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (Velmurugan Distributors) இப்பாரிய முயற்சியை முன்னெடுத்துள்ளனர், இதற்காக முதலில் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ம்,05ம்,11ம் மற்றும் 12ம் திகதிகளில் மட்டக்களப்பு கோட்டைமுனை புற்தரை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு கழகம், மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம், மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டு கழகம், காத்தான்குடி ND விளையாட்டு கழகம், கல்லாறு சென்றல் விளையாட்டு கழகம், கல்குடா அன்னைவேளாங்கன்னி விளையாட்டு கழகம், பூநொச்சிமுனை விளையாட்டு கழகம் மற்றும் எக்கோ விளையாட்டு கழகம் என்பன தமது சரித்திரம் வாய்ந்த இந்த புற்தரை மைதான கடின பந்து கிரிக்கெட் தொடரில் சந்திக்கவுள்ள கழகங்கள் ஆகும்.

இதன் போது கருத்து தெரிவித்த வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (Velmurugan Distributors) பிரதிநிதியான காசிப்பிள்ளை சதீஸன் அவர்கள் தமக்கு இப்போட்டியை நடாத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை இட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இப்போட்டிகளில் பங்குபற்றும் கழகங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிவித்து, முதல் இடத்தை பெறும் அணிக்கு ஐம்பதாபயிரம் ரூபாய் பணப்பரிசும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு முப்பதாயிரம் ரூபாய் பணப்பரிசும், மூன்றாமிடம் பெறும் அணிக்கு பதினையாயிரம் பணப்பரிசும் வழங்குவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில் மட்டக்களப்பில் மாத்திரமல்ல வடகிழக்கிலேயே இப்படியானதொரு புற்தரை மைதானத்தை அமைத்து அதில் மட்டக்களப்பு கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் முன்னேற வேண்டும் என்கின்ற தூர நோக்கு சிந்தனையில் செயல்பட்டு வரும் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர் நாயகம் புவனசிங்கம் வசீகரன் அவர்களுக்கு தம் பாராட்டையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

இதன் பின் ஒவ்வொரு கழகமாக கலந்தாலோசித்து போட்டிகளுக்கான அட்வனை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர்களான ச.காசிப்பிள்ளை, ஏ.சிவநாதன், கே.தயாசிங்கம், பே.சடாற்சரராஜா, பா.ஜெயதாஸன் மற்று கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் செயலாளர் வீ.வசந்தமோகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.










Comments