Velmurugan Distributors T/10 League பங்குபற்றும் அணிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது....
மட்டக்களப்பில் கடின பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக மட்டக்களப்பில் நீண்ட கால வர்த்தக நாமத்தில் சிறந்து விளங்கும் வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (Velmurugan Distributors) நிறுவனத்தினர் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 08 அணிகளை ஒன்றினைத்து மிகப்பிரம்மான்டமாக T/10 தொடரினை பெப்ரவரி மாதம் 4ம், 5ம், 11ம் மற்றும் 12ம் திகதிகளில் மட்டக்களப்பின் வரலாற்று சான்றுகளில் ஒன்றாக திகழும் கோட்டைமுனை விளையாட்டு கிராம (KSV) மைதானத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளது.
இப்போட்டி தொடரில் பங்குபற்றும் கழகங்கள்....
01.கோட்டைமுனை விளையாட்டு கழகம்
02.சிவானந்தா விளையாட்டு கழகம்
03.பூநொச்சிமுனை விளையாட்டு கழகம்
04.வேளாங்கன்னி விளையாட்டு கழகம்
05.சந்திவெளி எக்கோ விளையாட்டு கழகம்
06.சென்றலைட் விளையாட்டு கழகம்
07.காத்தான்குடி ND விளையாட்டு கழகம்
08.கல்லாறு சென்றல் விளையாட்டு கழகம் என்பன மோதவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த வேண்டும் எனும் தூர நோக்கு சிந்தனையில் மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தில் இப்போட்டிகளை நடாத்துவதன் மூலம் இன்னும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்க முடியும் என சிந்தித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுக்கான சேவையினை மிகச்சிறப்பாக செயலாற்றி வரும் Velmurugan Distributors இந்த 10 ஓவர்கள் கொண்ட கடின பந்து கிரிக்கெட் தொடரினை ஏற்பாடு செய்துள்ளது இது பாராட்டத்தக்க விடயமாகும் என பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அத்துடன் இத்தொடர் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக நடாத்தப்பட வேண்டும் எனவும் பலரும் தம் கருத்துக்களை இப்போட்டிகள் ஆரம்பிக்கும் முன்பே தெரிவித்த வண்ணம் உள்ளனர். இத்தொடர் போன்று இனி வரும் காலங்களில் இன்னும் பல கடின பந்து கிரிக்கெட் தொடர்களை பல்வேறு பட்ட மட்டங்களில் நிறுவனங்களும், அமைப்புக்களும் ஏற்பாடு செய்து மட்டக்களப்பில் கடினபந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த உதவ வேண்டும் எனவும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment