Velmurugan Distributors T/10 League KSV மைதானத்தில்....
மட்டக்களப்பில் கடின பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக மட்டக்களப்பில் வர்த்தக நாமத்தில் சிறந்த வியங்கும் வேல்முருகன் ஏஜன்சி நிறுவனத்தினர் (Velmurugan Distributors) முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 08 அணிகளை ஒன்றினைத்து T/10 தொடரினை நடாத்த திட்டமிட்டுள்ளது.
இப்போட்டிகளானது எதிர்வரும் பெர்ரவரி மாதம் 4ம், 5ம், 11ம் மற்றும் 12ம் திகதிகளில் மட்டக்களப்பின் வரலாற்று சான்றுகளில் ஒன்றாக விளங்கும் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் மைதானத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளது.
வெற்றிபெரும் அணியினருக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்களும் வழங்கப்படவுள்ளதுடன், இவ்வணிகளை முதல் தடவையாக புற்தரை மைதானத்தில் களம் காண்பதற்கான வாய்பையும் வேல்முருகன் ஏஜன்சி நிறுவனத்தினர் (Velmurugan Distributors) ஏற்படுத்தி கொடுத்துள்ளது பாராட்டத்தக்க விடயமாகும். இம்மைதானத்தில் முதல் தடவையான 08 அணிகள் மோதிக் கொள்ளும் T/10 தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மட்டக்களப்பு கிரிக்கெட் வீரர்களுக்கு வரபிரசாதமாக விளங்கும் இக்கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் மைதானத்தில் இப்போட்டியில் மட்டக்களப்பின் பிரபலமான கழகங்கள் மேதவுள்ளள்ளது. இது பற்றிய விபரங்களை இனிவரும் காலங்களில் அறியத்தருவோம்.....
Comments
Post a Comment