சமுர்த்தி Mobile app தொடர்பான பரீட்சாத்த வேலைத்திட்டம் சந்திவெளி சமுர்த்தி வங்கியில்.....
சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு 28 வருடங்கள் கடந்து விட்டது. இதன் அடிப்படையில் சமுர்த்தி வங்கிச்சங்கம் பல பரினாம வளர்ச்சியடைந்து இன்று இலங்கையில் சமுர்த்தி வங்கிச்சங்கம் மிகப்பெரிய ஒரு நீண்ட வளர்ச்சியை கொண்டதாக காணப்படுகின்றது.ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் கிராமங்கள் தோறும் சிறு குழுக்கள் அமைக்கப்பட்டு சேமிப்பு மிகச்சிறிய தொகைகள் அறவிடப்பட்டது, இதுவே காலப்போக்கில் சமுர்த்தி சங்ககளின் சேமிப்பாக மாறி பாரிய வெற்றியை கண்டது. அதனைத் தொடர்ந்து சங்கங்களை ஒன்றினைத்து சமுர்த்தி வங்கிச்சங்க வளர்ச்சியடைந்தது. இதுவே இலங்கையில் காலப்போக்கில் வறிய மக்களுக்கு வறிய மக்களே பிணையாக நின்று இலகு கடன் வழங்கும் வங்கியாகவும், குறைந்த செல்லும் வட்டிவீததத்தில் கடன்களை வழங்கும் வங்கியாகவும் காணப்பட்டது.
இதுவே காலப்போக்கில் கணனி மயமாக்கல் வங்கியாக மாற்றப்பட்டு சமுர்த்தி பயனுகரிகள் ATM பரிவர்த்தனை நிலையங்களில் பணங்களை பெற்றுக் கொள்ளும் வங்கியாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதன் மற்றுமொரு செயற்பாடாக Mobile app ஊடாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் களத்தில் சேகரிக்கும் பணம் நேரடியாக சமுர்த்தி வங்கிக்கு சென்றடைவதற்கான பணிகள் தற் போது மேற் கொள்ளப்ட்டு வருகின்றன.
இதன் பரீட்சாத்த வேலைத்திட்டம் (25)ம் திகதி அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சந்திவெளி சமுர்த்தி வங்கியில் சமுர்த்தி திணைக்களத்தின் (IT) தழிழ் பிரிவுக்கான உத்தியோகத்தர் த.பவளேந்திரன் அவர்களின் கண்காணிப்பில் Mobile app தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். இதன் போது சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தாங்கள் களத்தில் சேகரிக்கும் பணத்தை தங்களிடம் வழங்கப்படும் கைபேசி Mobile app மூலம் வங்கிக்கு அனுப்புவது தொடர்பாகவும், அதனை வங்கியில் எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு User name மற்றும் அதற்கான Pass word என்பனவும் வழங்கி பரீட்சிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கு பொறுப்பான முகாமையாளர் நிர்மலா கிரிதராஜ், மாவட்ட செயலக கணக்காய்வு முகாமையாளர் I.முரளிதரன், மாவட்ட செயலக சமுர்த்தி புலனாய்வு பிரிவின் முகாமையாளர் N.விஸ்வலிங்கம் கிரான் பிரதேச செயலக தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட மகாமையாளர், சந்திவெளி சமுர்த்தி வங்கி முகாமையாளர், புலிபாய்ந்தகல் வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்த கொண்டனர்.
Comments
Post a Comment