கிளிநொச்சியில் இரண்டாகப் பிளந்தது தமிழரசு - சுயேட்சை குழுவாக களமிறங்கிய முக்கியஸ்தர்கள்
கிளிநொச்சி மாவட்டத்திற்குற்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேசசபைகளில் சுயேட்சை குழுவாக ஒன்றினைந்து போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபை பின் முன்னாள் உப தவிசாளர் உள்ளிட்ட ஏராளமான கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலரும் இணைந்து குறித்த முடிவை எடுத்துள்ளனர்.
தமிழரசு கட்சியின் மாவட்ட தலைமை இம்முறை ஆசனப்பங்கீடு விடயத்தில் கட்சிக்காக கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை புறம்தள்ளி, தகுதியானவர்களுக்கு இடம்கொடுக்காமல் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் ஆசன ஒதுக்கீடுகளை மேற்கொண்டமையே குறித்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சுயேட்சை குழு 1:
தமிழரசு கட்சியின் மாவட்ட தலைமையின் செயற்பாட்டால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள் தனிவழியே தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்து மிகப்பெரும் மக்கள் ஆதரவோடு சுயேட்சை குழு 1 இன் மூலம் களத்தில் இறங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழரசுகட்சியின் தீவிர செயற்பாட்டாளர்கள் மொத்தமாக கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனியாக தேர்தலை எதிர்கொள்வது கட்சியின் மாவட்ட தலைமையாகிய நாடாமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிர்கால அரசியலில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Comments
Post a Comment