அதிகாரிகள் பற்றாக்குறையினால் எல்லை நிர்ணயம் செய்யும் பணிகள் தாமதம் !

 அதிகாரிகள் பற்றாக்குறையினால் எல்லை நிர்ணயம் செய்யும் பணிகள் தாமதம் !

அதிகாரிகள் பற்றாக்குறையினால் தேர்தல் எல்லை நிர்ணயம் செய்யும் பணி தாமதமாகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மத்திய வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் பேசுகையில் ;

எல்லை நிர்ணயம் செய்யும் பணியை நாங்கள் தொடர்கிறோம். பெப்ரவரி 28ஆம் திகதி வேலையை முடித்துவிடுவோம் என நம்பினோம். ஆனால் அவ்வாறு நடைபெற வாய்ப்பில்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் திகதியில் இருந்து 7 அரச அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் ஓய்வு பெற்றுள்ளனர். புள்ளியியல் அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குழுவின் முன்னாள் முதுநிலை அளவீடு அலுவலர்கள் 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், உள்ளாட்சி தேர்தல் பணிகளும், தேர்தல் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லை நிர்ணயம் செய்யும் பணி தாமதமாகிறது. இதனால், இப்பணியை, மார்ச், 31 ஆம் திகதிக்குள், சிரமப்பட்டு முடிக்கலாம் என நினைக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார் .

Comments