பின்தங்கிய பிரதேச பாடசாலை மணவர்களுக்கு மட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களார் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு......

 பின்தங்கிய பிரதேச பாடசாலை மணவர்களுக்கு மட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களார் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு......

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமாகிய தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் கற்றல் உபகரணங்கள் இன்று (12) தாண்டியடி பாடசாலையில் வைத்து அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இவ்வருடம் புத்தாண்டினை முன்னிட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் நிதிப்பங்களிப்பில் பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் 102 பேருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சார்பில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழுமம் இக்கற்றல் உபகரணங்களை உரிய மாணவர்களுக்கு நேரில் சென்று வழங்கி வைத்தனர்.
இப்பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் 11 வரையான தரங்களில் 220 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தொழில் பாதிப்பினால் பாடசாலை மாணவர்களின் கல்வி நிலை மாவட்டத்தில் பரவலாக பாதிப்படைந்து காணப்படுகின்றது. இதனடிப்படையிலேயே தாண்டியடி பாடசாலை மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜெயரஞ்ஜினி கனேசமூர்த்தி, மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். கமால்தீன் உட்பட மாவட்ட திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் இதன்போது பிரசன்னமாயிருந்தனர்.
மேலும் இப்பாடசாலையில் நிலவும் தளபாட பற்றாக்குறைக்கு மத்தியில் கடந்த 2021 ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரத்தில் 68வீதம் சித்தி அடைவினைப் பெற்றுள்ளதுடன் குடியுரிமைக்கல்வி, நாடகமும் அரங்கியலும், சுகாதாரமும் உடற்கல்வி, விவசாயம் போன்ற பாடங்களில் 100 வீத சித்தி அடைவினையும் இப்பாடசாலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.













Comments