காங்கேயனோடை அல்அக்ஸா மகா வித்தியாலயே ஆராதனை மண்டபத்திற்கு ஆசனங்கள் அன்பளிப்பு!!
காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்திற்கு மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சியாதினால் ஆசனங்கள் அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டன.
இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாசனங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
இப் பாடசாலையின் ஆராதனை மண்டபத்திற்கு சுமார் 300 கதிரைகள் தேவை உள்ளன என்று இவர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இவ்வாராதனை மண்டபத்திற்கான கதிரைகளை இப் பாடசாலையின் பழைய மாணவர்கள், ஊர் நலன் விரும்பிகள் மூலமாக பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment