இம்முறை பெரும் போக நெற் செய்கையாளர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும்......

 இம்முறை பெரும் போக நெற் செய்கையாளர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும்......

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தினை ஜீவனோபாயமாக கொண்ட மாவட்டமாகும். நெல் வயல்களில் தற்போது பரவி வருகின்ற மஞ்சள் நிறமாதல் வளர்ச்சி குன்றல் இவ்வாறான நோய்தாக்கம் ஏற்படுகின்ற பட்சத்தில் விவசாயிகள் உரியமுறையில் சிபார்சு செய்யப்பட்ட கிரிமிநாசினியை பாவித்து கொள்ள வேண்டும்.

நாடளாவிய ரீதியில் நெற்செய்கையாளர்கள் இப்பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ளனர். இன் நோய்தாக்கத்திற்கான காரணங்களாக நெமடோட தக்கம் பனிப்பூச்சியின் தாக்கம் முறையற்ற பசளைப் பயன்பாடு கபில நிறப்புள்ளி நோய் என்பவற்றை குறிப்பிடுகின்றது  விவசாய திணைக்களம்.

நெமடோட் தாக்கத்தை அடுத்து நெற்பயிர் தண்டு கபில நிறமாதல் மற்று வளர்சி இன்மை பால் வேரின் நுனிப்பகுதி ஹொக்கி மட்டைபோன்று வேர் நுனிப்பகுதியில் முடிச்சுக்கள் காணப்படும் 

நெமடோட் தக்கத்தினை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கையாக வயல் வரவைகள் ஒவ்வேன்றிக்கும் தனித்தனியாக பாச்சப்படல்வேண்டும் ஒரு வயலுக்குள் பாவித்த உபகரணங்களை அடுத்த வயலுக்கு பாவிக்கும் போது சுத்தப்படுத்தி பாவிப்பது நல்லது தாக்கம் அதிகரிப்பின் நெமடோட் நாசினியான  எபமெக்டினை பாவிக்கலாம் ஒரு ஹெக்டயருக்கு 50 கிலோகிராம் இடல் வேண்டும் வயலில் ஒரு செ.மீ நீரை தேக்கிவைத்து இட்டு மூன்று தொடக்கம் ஐந்து நாட்கள் இருப்பது அவசியமாகும் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போக விவசாயத்தில் 179500 ஏக்கர்கள் விவசாயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்திற்கு 62000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக கிழக்கு பல்கலைகழக விவசாய ஆராய்ச்சி பீடத்தினர் 10 வீதமான பாதிப்புத்தான் மட்டக்களப்பில் ஏற்பட்டுளளதாக குறிப்பிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் விவசாயிகள் அவதானமாக செயற்படவும்.

Comments