சர்வதேச புலம் பெயர்ந்தோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு ......

 சர்வதேச புலம் பெயர்ந்தோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு ......

சர்வதேச புலம் பெயர்ந்தோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்சினி முகுந்தன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணைப்பாளர் ஏ.ரகுநாதன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (10)ம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வெளிநாடுகளுக்கு அரச சட்டவிதிகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதன்போது பிரதேச செயலக மட்டங்களில் புலம் பெயர் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு புலம்பெயர்வோருக்கு அறிவூட்டப்படுவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் முகவர்களை நம்பி அதிகளவான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு பிரதேச மட்டங்களில் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான புலம்பெயர்தலை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் எஸ்கோ நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் கோதை பொன்னுத்துரை, எஸ் உதயேந்திரன், மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் பிரிவின் பதவி நிலை உதவியாளர் கே.எம்.ரிழா, மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், புலம்பெயர் தொழிலார்கள் மற்றும் புலம்பெயர் தொழிலார்களின் உறவினர்கள் என பலரும் பங்குபற்றினர்.
இக்கருத்தரங்கிற்கு எஸ்கோ அமைப்பு இணைஅனுசரணை வழங்கியிருந்ததுடன் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பாக தெளிவுபடுத்தும் பதாதைகள் வழங்கப்பட்டது.







Comments