ரொனால்டோவின் குடும்பத்தினருக்காக மூடப்பட்ட 'தீம் பார்க்ஹ.....

 ரொனால்டோவின் குடும்பத்தினருக்காக மூடப்பட்ட 'தீம் பார்க்ஹ.....

பிரபல காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது  குடும்பத்தினருடன் பொழுதுபோக்குவதற்காக சவுதி அரேபியாவிலுள்ள தீம் பார்க் ஒன்றுக்குள்  2 மணி நேரம் வெளிநபர்கள் செல்லத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அல் நஸ்ர் கிளப்பிற்கு இரண்டரை ஆண்டுகள் விளையாட 4,400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமான ரொனால்டோ, தனது பெண் தோழி ஜார்ஜினா மற்றும் அவர்களது 4 குழந்தைகளுடன் சவுதிக்கு இடம்பெயர்ந்தார்.

இந்நிலையில் அவர்கள் எவ்வித இடையூறுமின்றி பொழுதினைப் போக்குவதற்காக  ரியாத்திலுள்ள குறித்த பூங்காவானது  2 மணி நேரம் வரை  மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் திருமணமாகாத ஆண், பெண் சேர்ந்து வாழ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரொனால்டோவிற்கு மாத்திரம்  பிரத்யேகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Comments