வீடமைப்பு லொத்தரில் வெற்றி பெற்றவருக்கு வீடு கையளிப்பு.......
சமுர்த்தி திட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனாளிக்கு வீட்டு லொட்டரி அமைவாக வீடுகளுக்கான பணப்பரிசு வழங்கப்பட்டு, புதிதாக வீடமைத்துக் கொள்வதற்கும், வீடுகளை திருத்திக் கொள்வதற்கும், காணிகளை கொள்வணவு செய்வதற்குமான செயற்திட்டம் நடைபெற்று வருகின்றது..
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் 2022 ஒக்டோபர் மாதத்திற்கான வீடமைப்பு லொத்தரில் வெற்றி பெற்ற பயனாளியின் வீடு திருத்தப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு உரிய பயானாளியிடம் 2023.01.20ம் திகதி சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர் அவர்களால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்த கொண்டனர்.
Comments
Post a Comment