கூட்டமைப்பின் பெயரை பயன்படுத்தமுடியாது - சுமந்திரன் தெரிவிப்பு.....

 கூட்டமைப்பின் பெயரை பயன்படுத்தமுடியாது - சுமந்திரன் தெரிவிப்பு.....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவில் உருவாகியுள்ள புதிய கூட்டணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை தமது பாதாகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தனித்து முகங்கொடுப்பதென சிபாரிசு செய்திருந்த நிலையில் அது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதற்காக பங்காளிகளுடன் கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது. சம்பந்தன், ஐயாவின் வீட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவின் சிபார்சினை முன்வைத்து உரையாடியபோது, பங்காளிக்கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் தனித்தோ அல்லது கூட்டாகவோ செல்வதாக அறிவித்திருந்தார்கள். அப்போது சம்பந்தன் ஐயா, கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் வினவியிருந்தார். 

அதனையடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்களில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை இருதரப்பினரும் பயன்படுத்துவதில்லை என்று இணக்கம் காணப்பட்டது. எனினும், தற்போது ஏற்படுத்தப்பட்ட இணக்கத்தினை அப்பெயர் பயன்படுத்தப்படுகின்றது. அதுதொடர்பில் நாம் உரிய நடவடிக்கைளை எடுப்போம் என்றார். 

Comments