பன்மைத்துவம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்சி செயலமர்வு!!
பன்மைத்துவம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்சி செயலமர்வொன்று இன்று (19) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட தேசிய சமாதான பேரவையின் அனுசரனையில் சர்வ மத பேரவையின் ஒழுங்குபடுத்தலில் பதவி நிலை அதிகாரிகளுக்கான இரு நாள் வதிவிட பயிற்சி செயலமர்வு இன்று (19) கல்லடி தனியார் விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வ மத பேரவையின் கூட்டு இணைப்பாளர் ஆர்.மனோகரன் தலையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆர்.நவேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இன நல்லுரவு, இன ஐக்கியப்பாட்டை மேம்படுத்துவதுவதற்காக பன்மைத்துவம் கொண்ட சிறந்த சமுகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற தொனிப்பொருளில் குறித்த இருநாள் பயிற்சி பட்டறை இடம்பெறவுள்ளது.
அத்துடன் தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் உள்ளூர் மற்றும் சர்வதேச ரிதியில் எட்டப்படகூடிய தீர்வுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இந் நிகழ்வின் வளவளாராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களான கலாநிதி என்.புஸ்பராஜா மற்றும் கலாநிதி கே.சுரேஸ் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment