காத்தான்குடியில் பயனாளிகளின் தரவு சேகரிப்பு நடவடிக்கை.....
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நலன்புரி திட்டத்துக்கு பயனாளிகளை தெரிவு செய்யும் தரவு சேகரிப்பு நடவடிக்கை, காத்தான்குடி 4ம் குறிச்சி 164ம் இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளை தெரிவு செய்வதற்கான முன்னோட்ட தரவு கள விஜயத்தினூடாக இந்த தகவல் சேகரிப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் நலன்புரி நன்மைகள் தகவல் உத்தியோகத்தர்களான M.M.M.சப்வான், M.I.M.பாசில் ஆகியோரினால் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
Comments
Post a Comment