மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தைப்பொங்கள் விழா ஏற்பாடு.....

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தைப்பொங்கள் விழா ஏற்பாடு.....

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இம் முறை பாரம்பரிய முறையில் தைப்பொங்கள் விழாவினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
உழவர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு தைப்பொங்கள் திருவிழாவினை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அலுவலக உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இவ்விழாவில் பாரம்பரிய முறையில் பொங்கல் நிகழ்வுகள், கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வுகள் இடம் பெற உள்ளன.
இவ் விழாவினை சிறப்பாக நடாத்துவதற்காக மாவட்ட செயலக உயர் அதிகாரிகளினால் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Comments