இனி இலங்கையில் சிறு குற்றங்கள் செய்தால் வீட்டில் வைத்து அடைப்பது தொடர்பில் வெளியான அதிரடி செய்தி.!!!
இனி இலங்கையில் சிறு குற்றங்கள் செய்தால் வீட்டில் வைத்து அடைப்பது தொடர்பில் வெளியான அதிரடி செய்தி.!!!
சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை வீட்டுக் காவலில் வைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பு அதன் கொள்ளளவிலும் இரண்டு மடங்கு கைதிகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுகுற்றச் செயல்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை, வீட்டுக் காவலில் வைக்கும் முறைமை ஒன்றை அறிமுகம் செய்யுமாறு சிறைச்சாலைகள் திணைக்களம், நீதி அமைச்சிடம் கோரியுள்ளது.
சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதிகளை விளக்கமறியலில் வைக்காது, வீட்டுக் காவலில் வைப்பது குறித்து நீதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இவ்வாறு வீட்டுக் காவலில் வைப்பது என்பது குற்றித்த பொறிமுறைமை இன்னமும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசாங்கத்தின் செலவுகளை கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments
Post a Comment