மனித வியாபாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு.............

 மனித வியாபாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு.............

நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் சூழலில் கடல்சார் மனித கடத்தல், மனித வியாபாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு எஸ்கோ அலுவலகத்தில் வியாழக்கிழமை (05) திகதி இடம் பெற்றது.
நாடுகடத்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு எதிரான அமைப்பு, சமூக மேம்பாட்டு சேவைகள் அமைப்பு மற்றும் எஸ்கோ - கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை அமைப்பு ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு ஒன்றை நடாத்தியுள்ளது.
கடல் வழியாக ஆட்கடத்தல், புலம்பெயர்தல் போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி இதன் போது ஊடகவியலாளர்களுக்கு
விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் மக்கள் உள்ளிட்ட ஆள்கடத்தல் காரர்களை விழிப்புணர்வூட்ட வேண்டியதன் அவசியம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், ஊடகவியலாளர்களின் சந்தேகங்களிற்கும் பதிலளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Comments