தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான அறிவித்தல்.......

 தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான அறிவித்தல்.......

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  தபால்  மூலம் வாக்களிப்பு விண்ணப்பதாரிகள் இன்று (20) வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை  வரை உறுதிப்படுத்தப்பட்ட அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் காரியாலயத்தில் கையளிப்பதற்கு அஞ்சல் மூல உறுதிப்படுத்தல் அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறு தினம் ஞாயிற்றுக்கிழமைகளில் அஞ்சல் விண்ணப்பங்களில் தாமதம் ஏற்படக்கூடும் என்பதை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது  என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Comments