நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை: கல்வி இராஜாங்க அமைச்சர்..
நாளை (16) (திங்கட்கிழமை) அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டுவருவதை கருத்திற்கொண்டு, நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment