மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளராக எஸ்.எம்.எம்.அமீர் கடமையேற்பு......
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிமனைக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எம்எம். அமீர் 23.01.2023 சம்பிரதாயபூர்வமாக கடமைப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
இக்கல்வி வலயத்தின் பணிப்பாளராக கடந்த நான்கு வருடங்கள் பணிபுரிந்த டாக்டர் செய்யித் உமர்மௌலானா சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளராகவும் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளராக கடமையிலிருந்த எஸ்எம்எம். அமீர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கும் ஒத்துமாறல் பெற்றுள்ளனர்.
புதிய வலக்கல்விப்பணிப்பாளரை மலர் மாலை அணிவித்து வரவேற்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு பிரதிக்கல்விப்பணிப்பாளர் வீ.ரீ.எம்.அஜ்மீர் தலைமையில் ஏறாவூரிலுள்ள வலயக்கல்விப்பணிமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் , உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் உள்ளிட்டங்களாக கல்விப்பணிமனையின் அனைத்து உத்தியோகத்தர்களும் சம்மாந்துறை வலயத்தின் கல்வியதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
புதிய வலயக்கல்விப்பணிப்பாளர் வரவேற்பு நிகழ்வின் பின்னர் அலுவலகத்தின் அனைத்து கிளைகளையும் பார்வையிட்டார்.
வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்எம்எம். அமீர் ஏலவே இக்கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007 ஆம் ஆண்டில் காத்தான்குடி இ ஏறாவூர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஆகிய கல்விக்கோட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இக்கல்வி வலயம் ஆரம்பகாலத்தில் கபொத சாதாரண தர பரீட்சையில் 3 வருடகாலமாக முதலிடத்தைப் பிடித்திருந்து பின்னர் 2018 ஆம் ஆண்டில் 57 ஆம் இடத்திற்குப் பின் தள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்னாள் பணிப்பாளர் உமர்மௌலானாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அயராத முயற்சியின் பயனாக தற்போது தேசிய மட்டத்தில் பத்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்எச்எம். றமீஸ் தெரிவித்தார்.
Comments
Post a Comment