ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது. (16) இன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
யாழ் மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் இதன் போது கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.
Comments
Post a Comment