குறைக்கப்பட்டுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை....
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை 4 ஆயிரத்து 409 ரூபாவாகும்.
5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஆயிரத்து 770 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் 2.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 38 ரூபாவினால் குறைக்கப்பட்டு 822 ரூபா என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment