ஒமேகா முழுநீளத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டக்களப்பில் நடைபெற்றது.

 ஒமேகா முழுநீளத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டக்களப்பில் நடைபெற்றது........


"அ" கலையகத்தின் தயாரிப்பில், கிரேஷன் பிராசித்தின் இயக்கத்தில் மட்டக்களப்பில் தயாராகிவரும் மூழு நீளத் திரைப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்கள் மற்றும் படத்தின் முன்னோட்டக் காணொளி என்பன (16) வெளியிடப்பட்டன.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், அவர்களது உறவினர்கள், மட்டக்களப்பு சினிமாத்துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், சினிமா இரசிகர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இப்படத்திற்கான இசையமைப்பாளராக ஏ.என்.அன்று பணியாற்றியிருந்ததுடன் அவரது குழுவினரால் மேடையில் நேரடி இசை நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது. பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன், படத்தில் முக்கிய வேடமேற்று நடித்த நடிகர்களின் அனுபவங்களும் பகிரப்பட்டன.
"அ"கலையகத்தினால் தயாரிக்கப்பட்ட வடமோடிக் கூத்து தொடர்பான ஆவணப்படமொன்றும் இந்த நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதுடன், நிகழ்ச்சியின் இறுதியில் எழுத்தாளர் திரு.உமா வரதராஜன், இயக்குநர் கிரேஷன் பிரசாத் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

Comments