பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான கூட்டம்!!

 பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் (27) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
அலுவலகங்களில் காகிதாதிகளின் பாவனையைக் குறைப்பதற்காக, இயன்றளவு, நவீன தொழில்நுட்ப மயமாக்கலின் ஊடாக அலுவலகக் கடமைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரினால் பணிப்புரை வழங்கப்பட்டது.
இதன்போது பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரசாங்க நிருவாக நடவடிக்கைகளை கணக்கெடுக்கும் முறைமையை (SYSCGAA) நடைமுறைப்படுத்தல், சுதந்திர தின நிகழ்வு, நலன்புரி சேவைகள், புதிய நாடு புதிய கிராமம் நிகழ்ச்சித் திட்டம் ஆகிய நிருவாக விடயங்களும், “சௌபாக்கியா கிராமம்” வேலைத்திட்டத்திற்கான முன்மொழிவு, நீர்ப்பாசன அமைச்சினால் காலநிலை மாற்றத்தை எதிர்நோக்குவதற்கான நிகழ்ச்சித் திட்டம், உணவுப் பாதுகாப்பும் போஷாக்கு தொடர்பான வேலைத்திட்டம், காணி, சமுர்த்தி மற்றும் உள்ளகக் கணக்காய்வு என்பன தொடர்பாக ஆராயப்பட்டன.
முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்குப் பொதி விநியோகம், மற்றும் உள்ளுராட்சித் தேர்தல் கடமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி ஸ்ரீகாந்த், நவரூப ரஞ்சனி முகுந்தன் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதான கணக்காளர் இந்திராமதி மோகன், மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




Comments