உருளைக்கிழங்கு. பெரிய வெங்காயம், சீனி என்பவற்றின் மொத்த விலைகள் குறைந்தன.......

 உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம்,  சீனி என்பவற்றின் மொத்த விலைகள்  குறைந்தன.......

கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் புதிய மொத்த விலை 130 ரூபா என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய மொத்த விலை 100 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 80 முதல் 100 ரூபாவினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 205 ரூபாவாகக் குறைந்துள்ளது.

Comments