அமைச்சு பொறுப்பேற்கவுள்ள மேலும் சிலரின் விபரங்கள் வெளியாகின!
மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலரே அமைச்சு பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வஜிர அபேவர்தன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 8 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment