இந்த நேரத்தில் தேர்தலை நிறுத்துவது சரியானது: விக்னேஸ்வரன்....
நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் தேர்தலை நிறுத்துவது சரியானது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் ஒரு தேர்தல் நடந்தால் மக்களிடையே முரண்பாடுகளும் தமது பதவிகளுக்காகப் பிரிந்து கொண்டு போகின்ற தன்மையும், நாட்டிலே தற்போது ஓரளவு நிலவும் சட்ட ஒழுங்கை கூட பாதித்துவிடும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்ட நிலைமையில் பணத்தை இதில் கொட்ட வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் மாகாண சபை தேர்தலை நடத்தினால் பரவாயில்லை எனவும் க. வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment