மண்டைதீவில் நூறு ஏக்கரில் சர்வதேச தரத்தில் மைதானம் அமைக்கத் திட்டம்......
யாழ்.மண்டைதீவில் நூறு ஏக்கரில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப் பட்டுள்ளது.
வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாண மட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் நேற்று (12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலிலேயே இவ் விடயம் கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச மைதானத்துக்காக ஏற்கனவே 50 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மைதானத்துக்காக 100 ஏக்கர் வரை தேவைப்படுகிறது. அதனைப் பெறுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜிம்னாஸ்டிக் அரங்கம், விளையாட்டு மையங்களை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
Comments
Post a Comment