காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி...........
காந்தி ஸ்டார் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியானது காந்தி ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் அதன் தலைவர் கே.பிறேமசந்திரன் தலைமையில் மிகச்சிறப்பாக இடம் பெற்றது.
அதிதிகளுக்கு மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன், வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்றது.
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் 4 அணியினராக பிரிக்கப்பட்டு சிநேகபூர்வமாக இடம்பெற்ற போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்ததுடன், காந்தி ரைடர்ஸ் அணியினர் வெற்றியீட்டி இருந்தனர்.
Comments
Post a Comment