மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார சிநேகபூர்வ சந்திப்பு!!
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார அவர்கள் இன்று (20) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினாா்.
இக்கலந்துரையாடலின் போது மாவட்டம் சார்ந்த அனைத்து வேலைத்திட்டங்களிற்கும் விசேடமாக உணவுப் பாதுகாப்பு தொடர்பான விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தல் போன்றவற்றிற்கு தம்மாலான உதவிகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாக பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், 231 வது இராணுவ படைப்பிரிவின் சமூக இணைப்பாளர் கேணல் தம்மிக்க ஆகியோா் கலந்து கொண்டதுடன், இதன்போது பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார அவர்களினால் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு மலர்ச்செண்டு வழங்கி வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டார்.
Comments
Post a Comment