வாழைச்சேனை சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டுச்சபை தெரிவு....

 வாழைச்சேனை சமுர்த்தி வங்கியின்  புதிய கட்டுப்பாட்டுச்சபை தெரிவு....

சமுர்த்தி வங்கிகள் வருடந்தோறும்  தம் புதிய கட்டுப்பாட்டுச் சபைகளை தெரிவு செய்து வருகின்றன. இதன் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான புதிய கட்டுப்பாட்டு சபைகளின் தெரிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கமைய வாழைச்சேனை சமுர்த்தி வங்கி 2023ம் ஆண்டுக்கான தம் புதிய கட்டுப்பாட்டு சபையின் புதிய தெரிவுகளை (13) அன்று வங்கி கட்டிடத்தில் கட்டுப்பாட்டுச்சபை தலைவி சகாந்தி பிரதீப் தலைமையில் நடைபெற்றது. 

இப்புதிய தெரிவுக்கான கூட்டத்தில் வாழைச்சேனை சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கதிர்காமத்தம்பி தேவமனோகரி, வாழைச்சேனை சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வினோதினி சிவராசா, வாழைச்சேனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரதிதேவி சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







Comments