சந்தோசமான தைதிருநாளை கொண்டாடுவோம்......

 சந்தோசமான தைதிருநாளை கொண்டாடுவோம்......

2023ம் ஆண்டின் தைத்திருநாள் இதுவரை மக்கள் கண்டிராது பொருளாதார கஸ்டத்தின் ஒரு திருநாளாய் அமைந்துள்ளது.  தொழில் வாய்ப்பு மந்தம், விலைசாசி உயர்வு இதை எல்லாவற்றையும் தாண்டி எம்மவர் இன்று பொங்கல் வைத்து தைத்திருளாளை கொண்டாடுகின்றார்கள் என்றால், அவர்கள் கடவுள் பால் கொண்டுள்ள நம்பிக்கையும் அவர் எல்லாவற்றையும் செய்து முடிப்பார் என்கின்ற துணிவும் தான்.

 எனவே பழையதை கடந்து போகவும், நல்லது இனி வரும் நாட்களில் நடக்கவும் இத்தைதிருநாளில் பொங்கல் வைத்து எமக்கு கிட்டும் சந்தோசம், இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் கிட்டவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் தன் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இத்துடன் சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இவ்வருடம் சகோதரத்துடனும், ஒற்றுமையுடனும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்று   தன் தைத்திருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


Comments