மருந்துகள் வழங்கக்கோரி வைத்தியர்கள் போராட்டம் !

 மருந்துகள் வழங்கக்கோரி வைத்தியர்கள் போராட்டம் !

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டிற்கு உடனடி தீர்வு காணுமாறு கோரி அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் குழுவொன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறைக்கு அரசாங்கம் உடனடி தீர்வை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் டொக்டர் ரஞ்சன் கனேகம இது குறித்து தெரிவிக்கையில் :

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மூலிகைகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்போதெல்லாம் இலவச மருத்துவம் என்று எதுவும் கிடையாது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்களுக்குத் தேவையான மருந்தை வெளியில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதைப் பற்றி பேச வேண்டிய பொறுப்பு மருத்துவர்களாகிய எமக்கு உள்ளது. அரசாங்கம் உடனடியாக போதுமான மருந்துகள்இ உபகரணங்களை வழங்க வேண்டும் என்றார்.

Comments