மின்சாரக் கட்டண அதிகரிப்பால் மின்மானி வாசிப்பாளர் மீது தாக்குதல்.....
தமது வீட்டிற்கான இந்த மாத மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி, மின்மானி வாசிப்பாளர் ஒருவரை கட்டையால் தாக்கிய சம்பவம் ஒன்று புத்தளம் – மஹகும்புக்கடவல பகுதியில் பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மின்மானி வாசிப்பாளர் கடும் காயத்திற்குள்ளான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலாபம் மின் பொறியியலாளர் அலுவலகத்தின் கீழ் சேவையாற்றும் மின்மானி வாசிப்பாளர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மின்கட்டணம் அதிகரித்துள்ளதாக கூறி தாக்குதல் நடத்திய சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment