வேட்பு மனு தாக்கலின் பின் தேர்தல் நடத்தப்படும்.........
வேட்புமனு தாக்கலின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டம் மற்றும் உரிய விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடத்த தயாராகவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18) உயர் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அவசியமான நிதியை வழங்க முடியாது என திறைசேரி இதுவரை அறிவிக்கவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment