அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் நாளை சந்திக்கிறது.....
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கூட்டத்திற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இச்சந்திப்பு ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் நாளை (24) நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு இதுவாகும். அதன்படி, தேர்தல் நடைமுறைகள் குறித்து நீண்ட ஆலோசனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Comments
Post a Comment