அரச ஊழியர்களுக்கான பொது விடுமுறைகள் தொடர்பில் வெளியான புதிய செய்தி.....
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல் மற்றும் வேலை நாட்களை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கவனம் செலுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் அரச சேவையை மேலும் செயல் திறன் மிக்கதாக மாற்றுவதுடன் அரச சேவையை பொதுமக்கள் தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment