தேர்தல் தினத்தன்று மின்சாரம் வழங்க முடியாது : இலங்கை மின்சார சபை .....
தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக தேர்தல் தினத்தன்றும் வாக்கு எண்ணிக்கைக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடியாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்த முடியும் என்றாலும், அந்த இயந்திரங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நிலைமை தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக மின்சார சபை, ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment