புனித மிக்கல் கல்லூரிக்கு பெருமை தேடித்தந்த சசாங்கன்.....

 புனித மிக்கல் கல்லூரிக்கு பெருமை தேடித்தந்த சசாங்கன்.....

இலங்கையில்  ஒன்லைன் மூலம் நடைபெற்ற சர்வதேச இரசாயனவியல் ஒலிம்பியாட் 2022  போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் மாணவன் வசந்தமோகன் சசாங்கன் வென்கலப்பதக்கம் பெற்று பாடசாலைக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

சீனாவின் நங்காய் (Nankai) பல்கலைகழகம் நடாத்திய சர்வதேச இரசாயனவியல் ஒலிம்பியாட் 2022 போட்டியில் 80பதிற்கும் மேற்பட்ட  நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றி இருந்தனர். இவர்களில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தி வசந்தமோகன் சசாங்கன் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளார். இப்போட்டியில் இலங்கையில் இருந்து பலர் கலந்து கொண்ட போதிலும் 04 பேர் மாத்திரமே வெற்றி பெற்று இருந்தனர். கொழும்பு விசாகா வித்தியாலயம், புனித மிக்கல் கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா கல்லூரியை சேர்ந்த மாணவர்களே வெற்றி பெற்றிருந்தனர். இம்மாணவர்களுக்கு  (Goldan Monkey) விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.









Comments