சற்று முன் யாழில் பதற்றநிலை.! இராணுவம் பொலிஸார் அதிரடியாக குவிப்பு.........

 சற்று முன் யாழில் பதற்றநிலை.! இராணுவம் பொலிஸார் அதிரடியாக குவிப்பு.........

யாழில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் மீதே இவ்வாறு நீர்த்தாரை பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு ஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதி வழிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டம் இன்று (15.01.2023) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினாலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு வாழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (13.01.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த அமைதி வழிப் போராட்டத்துக்கான அழைப்பை மாணவர் ஒன்றியம் விடுத்திருந்தது. இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Comments