மட்டக்களப்பு ‘அ’ கலையகத்தின் தயாரிப்பில் உருவான ‘ஒமேகா’ திரைப்பட இசை வெளியீடு.........
மட்டக்களப்பு மாவட்டத்தை தளமாக கொண்டு இயங்கி வரும் ‘அ’ கலையகத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஒமேகா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் திங்கட்கிழமை (16) மாலை 4.30 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கிறேசன் பிரசாந் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்திற்கு ஏ.என்.அன்ரூ இசையமைத்துள்ளார். கடந்த வருடம் செப்டெம்பர் 8ம் திகதி இத்திரைப்படத்தின் Title மற்றும் poster வெளியீடு இடம்பெற்றிருந்ததுடன் ஒமேகா திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் முப்பது நாட்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல கலைஞர்களுடன் புதுமுக கலைஞர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
Comments
Post a Comment