தொழில் முயற்சியாளர்களுக்கு பெறுமதியான உபகாரணங்கள் கையளிப்பு!!

 தொழில் முயற்சியாளர்களுக்கு பெறுமதியான உபகாரணங்கள் கையளிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு பெறுமதியான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் அடையாளம் கண்டு தெரிவு செய்யப்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பெறுமதியான நவீன உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குளோபல் கொமியூனிட்டி, யூஎஸ் எயிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெறுமதியான நவீன உபகரணங்களை சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக வழங்கியிருந்தனர்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவருபரஞ்ஜினி முகுந்தன் உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





Comments