மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினால் மாபெரும் இரத்ததான முகாமொன்று (9) திகதி நடைபெற்றது.
கிழக்குப்பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளொரன்ஸ் பாரதி கெனடி தலைமையில் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வானது நாவற்குடா சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம் பெற்றது.
இதன் போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர், அத்தோடு ஆர்வத்துடன் இரத்த கொடையினையும் வழங்கி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment