ஏறாவூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் பாரிய சிரமதான பணி......

 ஏறாவூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் பாரிய சிரமதான பணி......

தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நுளம்பு பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் S.தனபாலசுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு பாரிய சிரமதான பணியை அன்மையில் நடாத்தி இருந்தது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.இராசலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட இச்சிரமதான நிகழ்வு பல இடங்களிலும் ஓரே நேரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இச்சிரமதான நிகழ்வில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












Comments